கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?
விசுவாசித்தால் அற்புதத்தைக் காண்பாய்! "இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" யோவான்11:40. எபிரேயர் 11 அதிகாரத்தில் வேத வசனங்கள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை நம்மில் பெருக்க செய்கிறது. "ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடே எழுந்திருக்க பெற்றார்கள் " எபிரேயர் 11:35 இதற்கு லாசருவின் உயிர்தெழுதல் நமக்கு சாட்சியாக இருக்கிறது. "நம்முடைய பெலவீனங்களை, வியாதிகளை, பாவங்களை, சாபங்களை இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார்! இனி நாம் சுமக்கத் தேவையில்லை." என்ற விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். மேலும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையை விசுவாசிக்க வேண்டும். அவரை இரட்சகராக, அற்புதம் செய்கிறவராக விசுவாசித்து, அற்புதத்தைப் பெற்றுக் கொள்வோம்!
கூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது பம்மாத்து – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார்
சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.
எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அதே தினம் கொழும்பில் வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம் திருத்தித்தச் சடத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே குறித்த கடிதம் எழுதப்பட்டதாக விபரங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோருவதானது முற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்றும் பம்மாத்து நடவடிக்கையாகும்.
இவ்விடயத்தை தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் உடனிருந்தார்.
மேற்படி ஊடக மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களின் ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது: சுரேஷ்
எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலாச்சாரம், பண்பாடு என்பன ஒன்றித்துப் போயுள்ளது. எமது மொழி, சமயம், வாழ்க்கை முறை என்பவற்றையொட்டி எமது பண்பாடுகளும், நாகரீகங்களும், பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன. ஆகவே, இவை அழிக்கப்படும் போது எமது இனம், மொழி, நாகரீகம், பண்பாடு என அனைத்தும் அழிக்கப்படும். இதனைக் கலாசாரப் பேரழிவு என்று குறிப்பிடலாம். இவ்வாறான கலாசாரப் பேரழிவை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். அகில இலங்கைச் சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாட்டின்முதலாம் நாள் நிகழ்வு இன்று யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் கோலாகலமாக ஆரம்பமானது. மாநாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், யாழ். நாவற்குழியில் ஏற்கனவே ஒரு புத்தபெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சட்ட விரோதமான சிங்களக் குடியேற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் பிரமாண்டமான பெளத்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு அண்மையில் இராணுவம் அடிக்கல் நாட்டியது. இதற்கெதிராக மக்களால் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது இலங்கையில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, நாவற்குழியில் பெளத்த விகாரையை அமைக்கலாம் என நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக பெளத்த மக்கள் இல்லாத சைவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றதொரு பிரதேசத்தில் பெளத்த மதத்தைத் திணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது இனத்தை அழிப்பதற்கு பல்வேறு பட்ட சூழ்ச்சிகள் பிரயோகிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது மொழியை, சமயத்தை, பண்பாட்டை, கலாசாரத்தை பாதுகாப்பதற்காக மிகவும் நீண்டகாலமாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். எமது கலாசாரம், பண்பாடுகள் என்பவற்றை அழித்தொழிப்பதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இலங்கை இராவணனால் ஆளப்பட்டதொரு சிவபூமி. 2500 வருடங்களுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தருகின்ற காலகட்டத்தில் இலங்கையில் ஐந்து ஈஸ்வரங்கள் காணப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், பொன்னீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்களும் காணப்பட்டது. தற்போது ஐந்து ஈஸ்வரங்களுக்கும் என்ன ஆனது? பொன்னீஸ்வரம் என்பது இல்லாமலேயே போய்விட்டது. திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு முன்பாக புத்தபெருமானுடைய மிகப்பெரிய சிலை நாட்டப்பட்டிருக்கிறது. திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைச் சூழவும், யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரர் ஆலயத்தைச் சூழவும் பெளத்தமயக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பெளத்த மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக சைவசமயத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்று முடிந்த யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்களும், ஏனையஆலயங்களும் அழிக்கப்பட்டன. குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன. தற்போது அந்த ஆலயங்கள் மீளக் கட்டியெழுப்பட்டு வளர்ச்சியடைந்து வரும் சூழலில் அரசாங்கம் இராணுவத்தின் துணையுடன் பெளத்த மதம் இல்லாத பிரதேசங்களில் பெளத்த ஆலயங்களை அமைத்து வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் கலாசாரப் பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், தமிழர்களின் பண்பாடு, நாகரீகம் என்பவற்றைச் சிதைக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. கன்னியா வெந்நீருற்று பழமை வாய்ந்த காலத்தில் இலங்கையை ஆண்ட இராவணனால் தனது தாயாருக்கு ஈமக் கிரியைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் அந்தப் பகுதியில் பெளத்த துறவியொருவர் நிரந்தரமாகத் தங்கிப் பிழைப்பு நடாத்தி வருகிறார். மூதூரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரியச் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில் கடல்பகுதியில் 67 அடி உயரமான புத்தபெருமானின் சிலை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு முழுவதும் ஒருகாலத்தில் சிவபூமியாக விளங்கினாலும் கூட அதனை மாற்றும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டுப் பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தி வருகிறது. அம்பாறையில், திருகோணமலையில் ஏற்கனவே பெளத்த மயமாக்கல் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது வடக்கு முழுமையாகக் குறி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நாங்கள் வெளிப்படையாகப் பேசினால் இனவாதிகளாகவும், ஏனைய மதங்களுக்கு எதிரானவர்களாகவும் நாங்கள் சித்தரிக்கப்படுகின்றோம். உண்மையில், நாங்கள் ஏனைய மதங்களுக்கோ,இனங்களுக்கோ எதிரானவர்களல்ல. எம் ஒவ்வொருவருக்கும் எமது மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றப் பூரண உரித்திருக்கிறது. அந்த உரித்தைப் பெரும்பான்மைப் பலம் கொண்டு நசுக்குகின்ற போது நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்க முடியாது. திருக்கோணேஸ்வரம் ஆலயமும் எங்கள் கைகளை விட்டுச் செல்லுமட்டும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? என அண்மையில் கிறிஸ்தவ பாதிரியாரொருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.எங்களுடைய சமயத்தை, கலாசாரத்தைப், பண்பாட்டை, மொழியைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பும், கடமையும் எங்கள் மண்ணின் இளைஞர், யுவதிகள் மத்தியிலுள்ளது. தமிழ்மக்களின் பாரம்பரிய கலாசாரங்களை எமது மண்ணில் நிலைநிறுத்த வேண்டிய, எமது சமயத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் இளைஞர்கள் இடமுள்ளது. பாராளுமன்றத்திற்குச்சென்ற எமது அரசியல் வாதிகள் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவார்கள் என்பதை விடுத்துத் தமிழ் இளைஞர், யுவதிகள் எமது கலாசாரம், பண்பாடு, மொழி , சமயம் அனைத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது கலாசாரம், பண்பாடு என்பவற்றை நிலைநிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் இவ்வாறான சைவ மாநாடுகள் உறுதுணை புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார்
இன்றைய இளையதலைமுறையினரை ஆட்டிவிக்க வந்துள்ளது ப்ளூவேல்(Blue Whale) கேம்.
இந்த விளையாட்டை, செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும்.
வித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த விளையாட்டில் இணையும் விளையாட்டாளருக்கு தொடர்ந்து 50 நாட்கள் Administartor வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பார். தொடக்கத்தில் அதிகாலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, பயத்திலிருந்து வெளியே வா என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிடச் சொல்வார்களாம்.
பின்னர் கையை கத்தியால் வெட்டு, மேம்பாலத்தில் நுனிப் பகுதிக்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ்களை தனிமைப்படுத்தி அவர்களை கிட்டதட்ட சைக்கோவாக்கி 50வது டாஸ்க்காக தற்கொலைக்கு தூண்டுவார்களாம்.
2015 மற்றும் 2016 காலகட்டத்தில் இந்த விபரீத ஆன்லைன் விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, பிரேசில், அர்ஜென்டினா என்று உலக நாடுகளைக் கடந்து இந்த விளையாட்டு இந்தியாவிலும் காலெடுத்து வைத்துவிட்டது என்பது மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
மும்பையில் 14 வயது சிறுவன் இந்த விளையாட்டின் போது தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,"ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர்களும் இந்த விளையாட்டு குறித்து அதிக எச்சரிக்கை கொள்ள வேண்டும்

வாட்ஸ்ஆப் மூலம் வரும் பிரச்சனைகளிற்கு தீர்வு
பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வாட்ஸ் ஆப் ஆகும். முகப்புத்தகத்தில் மட்டுமல்லாது வாட்ஸ்ஆப்பிலும் கூட தற்போது பெண்களுக்கு பிரச்சினை வருகின்றது.
தெரியாத நபர்கள்கூட, ஸ்டேட்டஸ் மூலம் நம்மை தொடர முடியும். தெரிந்தவர்களே தெரியாதவர்கள் கூட நமது வாட்ஸ் ஆப் கணக்கினை பார்க்க முடியும். நமது புகைப்படத்தினை பார்க்கவும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும்.
ஒரு போலி பெயருடன் ஒருவர் குறிப்பிட்ட தெலைபேசி எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று நம்மால் உறுதிபடுத்த முடியாத நிலையில், அவர் நம்முடன் தொடர்புகொண்டு, நமது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது.
தோழிகளால் 'வாட்ஸ்ஆப்’ குரூப்களில் நமது பெயர் இணைக்கப்படும்போது, அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் நமது தொலைபேசி எண் பகிரப்பட வாய்ப்புண்டு.
இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும்.
அதாவது, பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.
நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்வது கூடாது.
குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
'ப்ளாக்' (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, நமக்கு தொல்லை தருபவரை நமது கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது.
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது.
இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான 'நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், 'ஆபத்துதவி'யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும்.
ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நாம் இருக்கும் இடத்தினை விபரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய் சேர்ந்துவிடும்.
இவ்வாறாக பெண்களை பாதுகாப்பாக இருப்பது நல்லது.

மனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஞ்ஞானிகள் Gliese 832c என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை நாம் தொடர்பு கொண்டால், நமக்குத் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், நிச்சயமாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சிக்னல் வரும்.
ஆனால் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதில் தான் சாமர்த்தியம். வேற்றுகிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய அழிவை தவிர்க்க முடியும்.அவர்களும் நம்மைப் போன்று தான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே முயல்வார்கள், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம்.
ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.